ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா ‘ஈவ் டீஸிங்’ நடக்கும்..! ஜீ தமிழ் சீரியலின் அரிய கண்டுபிடிப்பு.!!

Published : May 05, 2022, 12:13 PM IST
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா ‘ஈவ் டீஸிங்’ நடக்கும்..! ஜீ தமிழ் சீரியலின் அரிய கண்டுபிடிப்பு.!!

சுருக்கம்

லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா ‘ஈவ் டீஸிங்’ நடக்கும்.. என ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் பேரன்பு சீரியலில் பேசப்பட்ட  டைலாக்கிற்கு சமூக வலைத்தளத்தில் எக்கசக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சீரியலை சீரியஸாக பார்க்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். அதில் விழித்திரையை காட்டிலும் சின்னத் திரையில் வரும் சீரியல்கள் தங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அவ்வாறு பிரபல தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் படங்களை காட்டிலும் அதிக வரவேற்பு உள்ளன. அதில் வரும் நாயகன் நாயகிகளுக்கும்  ரசிகர் பட்டாளம் ஏராளம். அதோடு சினிமாவை விட காதல் ரொமான்ஸ் பாடல் என சீரியல்களில் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த ஜோடிகளை ஜோடியாக ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் உள்ளனர் பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக மாறி விட்ட சீரியல்களின்ப்ரோமோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சீரியலின் டிஆர்பியை  ஏற்றுவதற்காக அதிலிருந்து ஒரு முக்கிய காட்சி எடுத்து வெளியிடும். 

அதன் படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலின் புரோமோ ஒன்று தற்போது  தாறுமாறாக அடி வாங்கி வருகிறது. பிரபல சேனலான ஜீ தமிழில் பேரன்பு என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  இதில் ஏழை பெண்ணான நாயகியை நாயகனுக்கு அவரது அம்மா கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதும், தனக்கு பிடிக்காமல் அம்மாவுக்காக  நாயகன் திருமணம் செய்வதும் என தொடங்குகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தங்கையாக நடித்த வைஷ்ணவி தான் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக விஜய் வெங்கடேசன் நடித்து வருகிறார்.

 

 

இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ஒரு ப்ரோமோ வெளியானது. அதில் ராஜேஸ்வரி குடும்பத்திற்கு அடுத்தடுத்து வரவிருக்கும் இரு மருமகள்களை  சிலர் கிண்டல் செய்கின்றனர். இதனால் கோபம் அடைந்த அவர்களில் ஓரு பெண் போலீசுக்கு போன் செய்ய முயற்சிக்கிறார். அப்போது குறுக்கீடு நாயகி இத்தனை பேர் இருக்கும் போது நம்மை மட்டும் கிண்டல் செய்வது ஏன் உடுத்தியிருக்கும் உடை தான் அதற்கு காரணம் என கூறியிருக்கிறார். இந்த காட்சியில் இருவரும் புடவைதான் அணிந்திருக்கிறார்கள் ஆனால் ஒருவர் மட்டும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். இந்த ஜாக்கெட் அணிந்தால் தான் ரவுடி கிண்டல் செய்வதாக நாயகி தெரிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பிரபல பாடகி சின்மயி முதலில் இந்த வீடியோவை பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சோசியல் மீடியாவில் இந்த காட்சி பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!