
1960 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கமல்ஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா திரை உலகில் முன்னணி நாயகராக வலம் வருகிறார். உலகநாயகன் என ரசிகர்களால் போற்றப்படும் கமலஹாசன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 90களில் இவர் நடித்த மதன காம ராஜன், அபூர்வ சகோதரர்கள், குணா, தேவர் மகன் உள்ளிட்ட படங்கள் கமலுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. அதோடு அவ்வை சண்முகி படத்தில் கமலஹாசன் ஒரு பெண்ணாக நடித்து பலரது மனதையும் கவர்ந்து இருந்தார்.
2000 களின் துவக்கத்தில் தனது கனவுப் படமான மருதநாயகம் படத்தை தனது சொந்த தயாரிப்பு எடுக்கும் முயற்சியை இரண்டு ஆண்டுகளை கழித்தார். பின்னர் அந்த முயற்சியை இடை நிறுத்திவிட்டு ஹேராம், தெனாலி, ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம் பஞ்சதந்திரம் விருமாண்டி, அன்பேசிவம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கமலஹாசன் எழுதிய இயக்கிய விஸ்வரூபம் பல சர்ச்சைகளை சந்தித்தது . மதவாதத்திற்கு எதிராக இந்த படத்தின் கதைகளம் அமைந்தது எனக் கூறி படத்திற்கு தடை கோரி பல அமைப்புகளும் குரல் கொடுத்து இருந்தது.
நடிகரோடு மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளராகவும் பிரதிபலிக்கும் நடிகர் கமலஹாசன் தேவர் மகன் படத்தை தனது சொந்த தயாரிப்பில் இயக்கியிருந்தார் அந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது அதை எடுத்து குருதிப்புனல் படத்தையும் கமலஹாசன் தயாரித்த பின்னர் ஹேராம் விருமாண்டி, உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம், சிகடி ராஜ்யம், விஸ்வரூபம்-2, கடாரம் கொண்டான் தற்போது விக்ரம் உள்ளிட்ட படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே விஸ்வரூபம் சிக்கல் காரணமாக மன உளைச்சலில் இருந்த கமலஹாசன் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் அரசியல் கட்சியை தனது தலைமைகள் தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிட்டது.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தமானார். இவர் இதுவரை ஐந்து சீசன்களில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறு அறுபது ஆண்டு சினிமா வாழ்க்கை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வரும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கமலஹாசனுக்கு வெறும் ரூ.177 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்குப்பின் சினிமாவிற்கு வந்த விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் பல 100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நிலைகள் கமலஹாசன் சொத்து மதிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பும் கமலை விட மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி அஜீத் விஜய் போன்றவர்கள் படத்தயாரிப்பு சுதாரிப்பாக இருக்கும் நிலைகளில்கமல் தயாரித்த பல படங்களை பிளாப்பை சந்தித்தன. இவர் தயாரிப்பில் வெளியான தேவர்மகன், ஹேராம் உள்ளிட்ட படங்கள் ஓரளவு வெற்றி கண்ட போதிலும் அதற்கு அடுத்து வந்த படங்கள் மோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று இருந்தன இதனால் உலக நாயகன் கமலஹாசன் பெருத்த நஷ்டத்திற்கு ஆளானார். அதோடு தேர்தல் களத்திலும் இவர் பல கோடி ரூபாயை கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.