இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

Published : Oct 01, 2022, 06:58 PM IST
இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

சுருக்கம்

தற்போது  முன்னணி நாயகர்களின் படங்களில் எவை எல்லாம் முதல் நாள் நல்ல வசூலை குவித்துள்ளன என்பதை பார்க்கலாம்.

இந்த ஆண்டு (2020) திரையரங்குகளில் வெளியாகி முதல் நாள் அதிக வசூலை பெற்ற படங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.... இதுவரை அஜித்தின் வலிமை விஜயின் பீஸ்ட்  கமலின் விக்ரம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஆர் ஆர் ஆர், தனுஷின் திருச்சிற்றம்பலம், சிவகார்த்திகேயனின் டான், விக்ரமின் கோப்ரா, யாஷின் கேஜிஎப் 2, பொன்னியின் செல்வன், தனுஷின் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தன.

தற்போது  முன்னணி நாயகர்களின் படங்களில் எவை எல்லாம் முதல் நாள் நல்ல வசூலை குவித்துள்ளன என்பதை பார்க்கலாம்.  

இந்த பட்டியலில் முதல் வரிசை பிடித்திருப்பது அஜித்தின் வலிமை படம் தான் வெளியாகும் முன்பு ட்ரைலர் மற்றும் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் முன்பதிவு மூலம் 36.17 கோடிகளை முதல் நாளிலேயே வசூலாக பெற்றது வலிமை. ஆனால் படம் வெளியான பின்னர் இதற்கான கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன.

மேலும் செய்திகளுக்கு...விருது வழங்கும் மேடையை தொட்டு வணங்கிய சூர்யா...வைரலாகும் போட்டோஸ் இதோ!

விஜயின்  பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு, டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் குறித்த அதீத நம்பிக்கையில் முன்பதிவுகள் முதல் நாளில் குவிந்தன. ரூ.27.40 கோடிகளை வசூலாக பெற்றுது.

பொன்னியின் செல்வன் இந்த படமும் டிரைலர் பாடல்கள் என கலக்கியதால் புக்கிங்கும் அதிகமாக நடந்தது. முதல் நாளில் 27 கோடியை வசூல் ஆக பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் குட்டையை குழப்பும் ஆதி...ஜெசியை புறம்தள்ள புதிய திட்டம்!

நான்காவது இடத்தில் விக்ரம் உள்ளது கமலின் விக்ரம் படம் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்தது. இந்த படம் முன்பதிவின் மூலம் 20.61 கோடியை முதல் நாள் வசூலாக பெற்றது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் 15.21 கோடிகளை முன்பதிவு மூலம் வென்றது. சமீபத்திய சமூக சிக்கலான இருக்கும் பெண்கள் பிரச்சன்னை பேசியிருந்தது இந்த படம். 

தெலுங்கு படமான ஆர் ஆர் ஆர் தமிழகத்தில் முன்பதிவு மூலம் 12.73 கோடிகளை வசூலாக பெற்றிருந்தது. தனுஷின் திருச்சிற்றம்பலமும் 9.52 கோடிகளை வசூலாக பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

சிவகார்த்திகேயன் டான் படம் முதல் நாளில் 9.47 கோடிகளை வசூலாக பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது. எதிர்பார்ப்பாக இருந்த கோப்ரா படம் முதல் நாளில் ஒன்பது புள்ளி 28 கோடிகளை வசூலாக பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

முன்னதாக வெளியாகி இருந்த கே ஜி எஃப் 2 முதல் நாளில் 8.24 கோடிகளை வசூல் ஆக பெற்று 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் முதல் நாளுக்கு பிறகு அடுத்தடுத்து நாட்களில் படம் மாஸ் காட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!