மீண்டும் குட்டையை குழப்பும் ஆதி...ஜெசியை புறம்தள்ள புதிய திட்டம்!

By Kanmani P  |  First Published Oct 1, 2022, 5:15 PM IST

நீ என்னை யார் கிட்ட வேணாலும் புருஷனு சொல்லிக்கலாம். ஆனா நான் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அந்த அந்தஸ்தை தர மாட்டேன் என முகத்தில் அறைந்தார் போல கூறுகிறார் ஆதி. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான ராஜா ராணி 2  முந்தைய எபிசோடில் பணத்தை திருடியது ஆதி தான் என தெரிந்ததும். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரிடம் கோபித்துக் கொண்டனர். யாரும் பேசாமல் இருப்பதால் மிகவும் சோகமாக இருந்தார் ஆதி.

பின்னர் சந்தியா அனைவரையும் சமாதானப்படுத்தி ஆதியிடம் பேச வைத்தார் பின்னர் நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. சீர் செய்யவில்லை என சிறு சிறு பிரச்சனைகள் வந்த போதிலும் கடைசி திருமணம் என்பதால் அனைவரும் ஒற்றுமையாக நின்று திருமணத்தை முடித்தனர். இன்றைய எபிசோடில் ஆதிக்கம் ஜெசிக்கும் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகின்றனர். அவர்களுக்கு காபி கொடுத்து  வரவேற்கின்றனர். பின்னர் சத்துமாவு கஞ்சி கொடுக்கிறார் அவரது மாமியார். இந்த விஷயத்தை ஆதி இடம் தெரிவிக்கிறார் ஜெசி.

Tap to resize

Latest Videos

ஆனால் ஆதியோ அதைப்பற்றி எந்தவிதமான மகிழ்ச்சியும் வெளி காட்டாமல் கோபப்படுகிறார்.  உன்னால் எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? உனக்கு இப்போது சந்தோஷம் தானே? நீ என்னை யார் கிட்ட வேணாலும் புருஷனு சொல்லிக்கலாம். ஆனா நான் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அந்த அந்தஸ்தை தர மாட்டேன் என முகத்தில் அறைந்தார் போல கூறுகிறார். அதோடு இந்த ரூமுக்குள் நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் இருக்கலாம். வெளியே சந்தோஷமாக இருக்கிற மாதிரி நாடகம் ஆடிட்டு போக வேண்டியது தான் எனக் கூறுகிறார். இதனால் அதிர்ந்து போய் நிற்கிறார் ஜெசி.

மேலும் செய்திகளுக்கு...காதலிக்காக அப்பாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய கோபி..கைகூப்பை கெஞ்சும் பாக்கியா!

இதற்கிடையே மழையில் நனைந்து குளிரால் நடுங்கி கொண்டிருக்கும் சரவணனுக்கு- சந்தியாவுக்கு இடையே ரோமன்ஸ் பற்றிக்கொள்கிறது. ஒருவழியா இருவருக்கும் முதல் இரவு முடிகிறது. பிறகு மறுநாள் காலையில் சரவணன் வந்து உட்காரா அவர் கழுத்தில் முகத்தில் முத்த தடம் இருப்பதை பார்த்த ஆதி, பார்வதி, அர்ச்சனா அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் சரவணனை உள்ளில் அழைத்து செல்கிறார் சந்தியா இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மேலும் செய்திகளுக்கு...காஸ்ட்லி பைக்குக்கு பதிலா வேற பைக்கை மாத்தி வைத்து தொக்காக மட்டிய டிடிஎஃப் வாசன்

click me!