இதெல்லாம் போதாது சேர்ந்து வாழ அடம் பிடிக்கும் பாரதியும் கண்ணம்மாவும்

Published : Sep 27, 2022, 03:19 PM ISTUpdated : Sep 27, 2022, 06:59 PM IST
இதெல்லாம் போதாது சேர்ந்து வாழ அடம் பிடிக்கும் பாரதியும் கண்ணம்மாவும்

சுருக்கம்

அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூற சௌந்தர்யா ஷாக் ஆகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் தீவிரவாதி சீக்வன்ஸ் முடிவுற்றது. அதை அடுத்து கண்ணம்மா பாரதி இருவருக்கும் அமைச்சர் மற்றும் போலிஸ் அதிகாரிகள் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கிடையே தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த வெண்பா குழந்தையை கலைக்க ஒப்புக்கொள்ளாமல் பாரதியை அதன் தந்தையாக ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என சூழ்ச்சி செய்கிறார். அதன்படி நேற்று பாரதியிடம் ஃபோன் செய்து தான் பெரிய சிக்கலில் இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் நேரில் பேச வேண்டும் என்றும் கூறும் வெண்பா கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளாதே அவள் உனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறார் என மீண்டும் பாரதியை குழப்பி விடுகிறார்.

இதனால் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் பாரதி. இந்த நிலைகள் இன்று காவல் அதிகாரிகள் முன்னிலையில் மேடையில் பேசும் பாரதி "மருத்துவராக என் கடமையை செய்தேன். அமைச்சருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் முடிக்க முக்கியமான காரணம் நான் மட்டுமில்லை எங்கள் ஹாஸ்பிடல் அட்மின் கண்ணம்மாவும் தான் அதுமட்டுமில்லாமில்லாமல் என்னுடைய உயிரை அவங்களோட உயிரை பணயம் வைத்து காப்பாத்தினாங்க அதுக்காக நான் என்னைக்குமேஅவங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று சொல்கிறார், பின்னர் சௌந்தர்யா சேர்ந்து வாழ சொன்னதைப் பற்றி யோசிக்கிறான். அதன் பின் கண்ணம்மா பேசுகிறார். 

பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

அவார்ட் பங்க்ஷன் முடிந்ததும் தீவிரவாதிகள் ஆபரேஷனில் முக்கிய ரோலில் இருந்த சசி பாரதியிடம் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் ஒருத்தர் உயிரை பணயம் வைத்து இன்னொருத்தர் காப்பாத்தினதை பார்த்து உங்களை பற்றி வெளியே விசாரிச்சேன் அப்போதுதான் நீங்கள் இரண்டு பேரும் கணவன் மனைவி சின்ன மனஸ்தாபம் காரணமாக பிரிந்துள்ளீர்கள் என கூறினார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு கொண்டு இருக்கிறீர்கள். இரண்டு பேரும் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என கேட்கிறார். விக்ரமும் அகிலும் அதையே கேட்கின்றனர். 

அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

அப்போது வெண்பா சொன்ன வார்த்தைகளைப் பற்றி யோசித்த பாரதி. அதன் பின்னர் அவர்களிடம் என்னால கட்டமாக ஏத்துக்க முடியாது அவங்களுக்கு நான் நன்றி கடன் பட்டு இருக்கேன். அதற்காக அவங்களோட என்னால சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். பின்னர் லட்சுமி மற்றும் கண்ணம்மாவை வீட்டில் இறக்கி விடும் சவுந்தர்யா, பாரதி இப்படி செய்தது கஷ்டமா இருக்கு என்று கூறுகிறார். அதற்கு கண்ணம்மா அவர் உயிரை காப்பாற்றுயதற்காக என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லி இருந்தால் அதற்கு நான் சம்மதித்திருக்க மாட்டேன். அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூற சௌந்தர்யா ஷாக் ஆகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்