காதலிக்காக அப்பாவை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய கோபி..கைகூப்பி கெஞ்சும் பாக்கியா!

By Kanmani P  |  First Published Oct 1, 2022, 4:59 PM IST

பாக்கியாவை அனுப்ப வேண்டாம் அவ முன்னாடியே  ராதிகா கழுத்தில் நான் தாலி கட்டுவது அவள் பார்த்த அதிர்ச்சியாக வேண்டும் என்கிறார் கோபி.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியின் திருமணம் நடைபெற்று வருகிறது. முந்தைய எபிசோடில் மண்டபத்தில் பாக்கியலட்சுமி பார்த்த ராதிகா அதிர்ச்சியாக அவரது குடும்பத்தினர் கோபியை வைத்து செய்கின்றனர். பின்னர் கோபி அவள்  வேண்டுமென்றே இங்கு வந்துள்ளால், அவள் என் மனைவியே கிடையாது ராதிகா தான் என் மனைவி எனக் கூறுகிறார். இதற்கிடையே செல்வி பாக்கியலட்சுமியிடம் இங்கு இருந்து சென்று விடலாம். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகு இங்கு சமைக்க வேண்டுமா? வா வெளியே போகலாம் என கூறுகிறார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாக்கியா, இது என்னுடைய வேலை நான் வரமாட்டேன் என கூறுகிறார்.  பின்னர் ராதிகாவும் கோபியும் மேடையில் நிற்பதை கோபத்துடன் பார்த்து நிற்கிறார். பாக்கியாவை பார்த்த கோபி அவரை திட்டி தீர்த்தபடி நேற்றைய எபிசோட் முடிந்தது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...காஸ்ட்லி பைக்குக்கு பதிலா வேற பைக்கை மாத்தி வைத்து தொக்காக மட்டிய டிடிஎஃப் வாசன்

இன்றைய எபிசோடில் கோபியின் தந்தை ராமமூர்த்தி கல்யாணத்தை நிறுத்துவதற்காக மண்டபத்திற்குள் நுழைகிறார். இவருக்கும் கோபிக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கோபி தனது தந்தையை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். பாக்கியா பதறிப் போய் அவரை தூக்கிவிடுகிறார். இதையெல்லாம் பார்க்கும் ராதிகா கோபத்துடன் உள்ளே சென்று விடுகிறார். அப்போது  எல்லோரையும் கஷ்டப்படுத்தி நீ மட்டும் சந்தோஷமா இருக்க போறியா? நான் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என ஆவேசமாக கூறுகிறார் ராமமூர்த்தி. அவ்வளவுதான் மரியாதை, வெளியே போயா... என கூறுகிறார் கோபி. உடனே பாக்கியா, கோபி முன்னாடி போய் நின்று, இப்போ என் மாமாவுக்கு நடக்குற விஷயம் நாளைக்கு உங்க பசங்களால் உங்களுக்கு நடக்க கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோங்க என சவால் விட்டு கிளம்புகிறார்.

பின்னர் அவனை வெட்டி போட்டாவது  கல்யாணத்தை நிறுத்துகிறேன் என ராமமூர்த்தி கூற, மறுபுறம்  பாக்கியாவை அனுப்ப வேண்டாம். அவள் முன்னாடியே  ராதிகா கழுத்தில் நான் தாலி கட்டுவதை அவள் பார்த்து அதிர்ச்சியாக வேண்டும் என்கிறார் கோபி.

மேலும் செய்திகளுக்கு...திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இதனிடையே ஹால்  ஓனர் வந்து நடந்த பிரச்சனையை பற்றி கேட்க பாக்கியா, அவரிடம் கை எடுத்து கெஞ்சுகிறார். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என கூறுகிறார்.  கடைசியா உங்களுக்கு இந்த வாய்ப்பை தருகிறேன் என கூறுகிறார் மண்டப ஓனர். இதையடுத்து தன் மாமனாரிடம் இது என்னுடைய வேலை, நான் செய்துவிட்டு வருகிறேன். எனக்கு சமையல் தான் முக்கியம் எனக் கூறுகிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

click me!