துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!

Published : Jul 05, 2022, 06:48 PM IST
துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!

சுருக்கம்

துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.  

துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள துணை நடிகை (நிவேதா) பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: நீயெல்லாம் மனுஷனா? அசிங்கமா இல்ல... மீனா கணவரின் மரணத்தை விமர்சித்த.. பயில்வானை வெளுத்து வாங்கிய பிரபலம்!
 

இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப்படங்கள் மற்றும் 'பேரன்பு' போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒருவரும் உள்ளார்.

மேலும் செய்திகள்: படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!

இந்நிலையில்  இவர் மாங்காடு காவல் நிலையத்தில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் குறித்து புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இது குறித்து துணை நடிகையின் மாமனார் -மாமியாரிடம் விசாரிக்க சென்றபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். எனவே அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
 

துணை நடிகை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது... 'நான் ஒரு நடிகையாக இருப்பதால் தன்னுடைய மாமனார் சரவணவேல் மற்றும் மாமியார் சாந்தி ஆகியோர் தன்னை மதிப்பதில்லை என்றும், பலமுறை நீ ஒரு நடிகை தானே என கேட்டு மாமனார் உடல் ரீதியாக தன்னிடம் அத்துமீற முயன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பலமுறை இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தபோதும் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல் துறையில் மிக உயரிய பதவியில் இருப்பதால் தன்னுடைய புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கூட தன்னுடைய மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அவரை தடுத்த காரணத்தால், பெரிய மரக்கட்டையை கொண்டு தன் மீது கொலவெறி தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!