Vishal - karthi : தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பில் உள்ள நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பில் உள்ளனர். இவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மூவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் அதே சங்கத்தை சேர்ந்த ராஜதுரை என்கிற துணை நடிகர் தான் கொலை மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... பணத்துக்கு ஆசைப்பட்டு என் புருஷனை பிரித்துவிட்டார்- நடிகை பவித்ரா லோகேஷ் மீது நரேஷின் 3-வது மனைவி பகீர் புகார்
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் கார்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொருளாளராக உள்ளார். அதேபோல் நடிகர் விஷால் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், நடிகர் நாசர் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... அவர் வில்லன்னா அப்போ நான் எதுக்கு... விஜய் சேதுபதி வருகையால் புஷ்பா 2-வில் இருந்து விலகினாரா பகத் பாசில்?
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இதில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதிக்கப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக எண்ணப்படாமல் இருந்த வாக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன் எண்ணப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் அனைத்து பதவிகளிலும் வெற்றிபெற்றனர். இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட பாண்டவர் அணியினர் தற்போது நிர்வகித்து வருகின்றனர்.