ராஜ்ஜியம் இல்லாத இளவரசன்.... பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வாகைசூட வரும் கார்த்தி - வைரலாகும் மாஸ் லுக்

By Ganesh A  |  First Published Jul 5, 2022, 12:34 PM IST

Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன் எனவும் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர். 


பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களை அப்படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடு வருகிறது. நேற்று சியான் விக்ரமின் தோற்றம் மற்றும் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி அவர் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்... இரவில் போட்ட அந்த போஸ்ட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்... ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இன்று நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம் மற்றும் அவரின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன் எனவும் புகழ்ந்து பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி குதிரை மீது அமர்ந்தபடி கெத்தான தோற்றத்துடன் அந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!

இனி வரும் நாட்களில் நடிகர் ஜெயம்ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்டர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பான் இந்தியா படமாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆதித்த கரிகாலனுக்கு நாமமா..? அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!

இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மன் செய்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டும் வெளியிடப்பட உள்ளது.

click me!