தந்தை பிறந்தநாளில் ஒரு கிராமத்துக்கே சொந்த செலவில் தடுப்பூசி..! மகேஷ் பாபு செயலுக்கு குவியும் பாராட்டு!

Published : Jun 01, 2021, 06:39 PM ISTUpdated : Jun 01, 2021, 06:40 PM IST
தந்தை பிறந்தநாளில்  ஒரு கிராமத்துக்கே சொந்த செலவில் தடுப்பூசி..! மகேஷ் பாபு செயலுக்கு குவியும் பாராட்டு!

சுருக்கம்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிராமத்துக்கே, தடுப்பூசி வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிராமத்துக்கே, தடுப்பூசி வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நடிப்பை தாண்டி, ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது, மற்றும் பல்வேறு சமூக பணிகளை செய்வதிலும் முந்தி கொண்டு நிற்பவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. இவர் ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து பல குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். அதையும் தாண்டி இந்த கொரோனா காலகட்டத்தில், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த ஆந்திராவை செய்த தினக்கூலி மக்களுக்கும் , சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.

மேலும், இவருடைய குடும்பத்தில் யாருடைய பிறந்தநாள் வந்தாலும்... அதனை பிரமாண்டமாக கொண்டாடுவதை விட பல்வேறு உதவிகள் செய்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மகேஷ் பாபு தன்னுடைய தந்தையும், பழம்பெரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு கிராமத்திற்கே கொரோனா பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கொண்டாடியுள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், உள்ள புர்ரேபாலெம், சித்தாபுரம் ஆகிய கிராமங்களை தத்தெடுத்துல மகேஷ் பாபு, புர்ரேபாலெம் கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனது சொந்தச் செலவில் இலவசத் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார். ஒவ்வொரு நபரையும் அச்சுறுத்தி வரும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக இவர் செய்துள்ள இந்த செயல்... அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 

தடுப்பூசியை, அந்த கிராம மக்கள்... முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், மாஸ்க் அணிந்தும் வந்து போட்டுக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa