"விஜய்யால் 500 கோடி கூட வசூல் பண்ண முடியும், ஆனால் அஜித்தால்"... தல ரசிகர்களை கடுப்பேற்றிய பிரபல தயாரிப்பாளர்...!

Published : Dec 10, 2019, 05:26 PM IST
"விஜய்யால் 500 கோடி கூட வசூல் பண்ண முடியும், ஆனால் அஜித்தால்"... தல ரசிகர்களை கடுப்பேற்றிய பிரபல தயாரிப்பாளர்...!

சுருக்கம்

"பிகில்" படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனஞ்செயன், தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினால் விஜய்யால் 500 கோடி வரை கூட சுலபமாக தொடலாம் என்று கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விஜய்க்கு பெருமை சேர்ந்துள்ளது. ஏற்கெனவே இப்படம் அஜித்தின் "விஸ்வாசம்" பட வசூல் சாதனை முறியடித்துவிட்டதாக கூறி விஜய், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கட்டிப்புரளாத குறையாக சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது அந்த பிரச்னைக்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். இப்போது சற்று தணிந்துள்ள அந்த பிரச்சனையை மீண்டும் கிளப்பும் விதமாக அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்து, அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். 

"பிகில்" படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனஞ்செயன், தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினால் விஜய்யால் 500 கோடி வரை கூட சுலபமாக தொடலாம் என்று கூறியுள்ளார். இதுல என்ன பிரச்சனை, ஒண்ணும் இல்லையேன்னு தான் தோணும். ஆனால் அதுக்குப்புறம் தான் மெயின் மேட்டரே. விஜய் பற்றி பேசிய தனஞ்செயன், அடுத்து அஜித் படங்களும் 500 கோடி வசூலிக்கும். ஆனால் அதுக்கு அவர் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அட்வைஸ் பண்ணியிருக்கார். 

மேலும் விஜய் ஒரு ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலாவது கலந்து கொண்டு, பேசிவிட்டு போய்விடுகிறார். அது எங்களுக்கு செம்ம மார்க்கெட்டிங்காக அமைகிறது. ஆனால் அஜித் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவதில்லை. அதுதான் பெரிய சிக்கல், அதனால புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் அஜித் பங்கேற்றால் அவரது மார்க்கெட் எங்கேயோ போயிடும் என கருத்து தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!