
இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த அசிங்கத்தை சகித்துக் கொள்ளப் போகிறதோ கோடம்பாக்கம். நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில் விஷால் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. இப்படியொரு பேட்டியை கட் பண்ணாமல் அப்படியே வெளியிட்ட சேனல் மீது கோபம் கொண்ட பலரும், ‘அந்த பேட்டியை தூக்குங்க’என்று கேட்டுக் கொண்டார்கள். ஏனென்றால் எந்த ஒரு நடிகையும் இப்படி ஒரு பேட்டியை பார்த்திருக்கவோ, படித்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். ஆனால் அதற்குள் டவுன்லோட் செய்து ஆங்காங்கே மீம்சை தட்டிவிட்டது ஒரு கோஷ்டி.
ஆந்திராவில் அடித்து பற்றிவிடப்பட்ட ஒரு நடிகை, கோடம்பாக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுவதுதான் அதிர்ச்சி. ‘சாணி நம்ம மேல அடிச்சா?’ என்கிற அச்சத்தோடுதான் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறார்களாம் கோலிவுட் நாட்டாமைகள்.
இதில் சாதனை என்னவென்றால் நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் ஸ்ரீரெட்டியின் செய்தியை வெளியிட்டன. மக்களும் நடிகை என்றுதான் நம்பியே பார்த்து வருகின்றனர். ஆனால் உண்மையில் ஸ்ரீரெட்டி இதுவரை நடித்து ஒருபடம் கூட வெளியாகவில்லை. தமிழில் மட்டுமில்லை. அம்மணி தெலுங்கில் மட்டுமல்ல அட இதுவரை ஒரு குறும்படத்தில் கூட நடித்ததில்லை என்பது தான் சாதனை. சோதனையிலும் சாதனை செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.