90’ஸ் ஹீரோயின்களுடன் மீண்டும் சூப்பர் ஸ்டார்... 28 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பூ... "தலைவர் 168" நியூ அப்டேட்...!

Published : Dec 10, 2019, 05:00 PM IST
90’ஸ் ஹீரோயின்களுடன் மீண்டும் சூப்பர் ஸ்டார்... 28 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பூ... "தலைவர் 168" நியூ அப்டேட்...!

சுருக்கம்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொண்டாட்டத்தில் மிதக்க வைத்துள்ளது. அப்படி என்ன அப்டேட் என கேட்குறீங்களா?, "தலைவர் 168" படத்தில் ரஜினியுடன் குஷ்பூ நடிக்க உள்ளதாக சர்ப்பிரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்த படவேலைகளில் பிசியாகிவிட்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு தலைவர் 168 என்ற தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் ஏற்கனவே பரோட்டா சூரி, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

சூப்பர் ஸ்டார் படம் குறித்து இன்று ஏதாவது அதிரடி அறிவிப்பு வரலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் மீனா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 24 வருடங்களுக்கு முன்பு முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, தற்போது மீண்டும் இணைகிறார் என்ற அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் இருவரும் ஒன்றாக நடித்த முத்து திரைப்படம் ஃபாரினில் இருந்து பட்டி, தொட்டி வரை சூப்பர் ஹிட்டடித்த படம். எனவே கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொண்டாட்டத்தில் மிதக்க வைத்துள்ளது. அப்படி என்ன அப்டேட் என கேட்குறீங்களா?, "தலைவர் 168" படத்தில் ரஜினியுடன் குஷ்பூ நடிக்க உள்ளதாக சர்ப்பிரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

 

28 வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை படத்தில் ஜோடி சேர்ந்த குஷ்பூ, இப்போது மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளார். வயதான ரஜினி, இளம் ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடி போடுகிறார் என்று விமர்சித்து வந்த நிலையில், மீண்டும் 90ஸ் ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது
டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!