பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா! கதை சொல்லிய முன்னணி இயக்குனர் தனிமை படுத்தப்பட்டார்..! திரையுலகில் பரபரப்பு!

Published : Jun 13, 2020, 03:02 PM ISTUpdated : Jun 13, 2020, 03:06 PM IST
பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா! கதை சொல்லிய முன்னணி இயக்குனர் தனிமை படுத்தப்பட்டார்..! திரையுலகில் பரபரப்பு!

சுருக்கம்

சமீபத்தில் பிரபல முன்னணி நடிகருடன் விலங்கை நடிக்க வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  

சமீபத்தில் பிரபல முன்னணி நடிகருடன் விலங்கை நடிக்க வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: அஜித், விஜய், நயன்தாரா, உள்ளிட்ட 14 பிரபலங்களின் கார் - பைக் கலெக்ஷன் பார்துருகீங்களா?
 

எனவே இந்த தயாரிப்பாளரை சந்தித்து, பிரபல முன்னணி இயக்குனர் ஒருவர் கதை கூறியுள்ளார். எனவே தயாரிப்பாளருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததும், உடனடியாக அவர் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டுள்ளதாகவும், தற்போது கொரோனா ரிபோர்டுக்காக வெயிட் பண்ணுவதால், அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள், இவருடைய குடும்பத்தினர் உட்பட கடந்த சில தினங்களாக இவருடன் நெருங்கி பழகி வந்தவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்..! அன்று முதல் இன்றுவரை அரிய புகைப்பட தொகுப்பு!
 

மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே தங்களுடைய உடல் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட மருத்துவர்களை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!