#UnmaskingChina: “சீன தயாரிப்புகள் வேண்டவே வேண்டாம்”... பிரபல இசையமைப்பாளரின் அதிரடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 20, 2020, 5:08 PM IST
Highlights

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பல நூறு ஆண்டுகளாக நீடித்து வந்த உறவு லடாக் எல்லை பிரச்சனையால் தலைகீழாக மாறியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த செய்தி இந்திய மக்களை மிகவும் கொதிப்படைய வைத்துள்ளது. இதனால் “சீன பொருட்களை புறக்கணிப்போம்” என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

 

இதையும் படிங்க: 

கடந்த சில நாட்களாகவே இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அப்போது  சீனாவின் மொபைல் ஆப்களை செல்போனில் இருந்து நீக்கும் ‘ரிமூவ் சைனா’ என்ற ஆப் இந்தியாவில் பிரபலமானது. சீனாவின் ஆப்களை செல்போனில் இருந்து அழிக்க கூடிய அந்த செயலியை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் டவுன்லோடு செய்தனர். ஆனால் இது தங்களது கொள்கைக்கு எதிரானது எனக்கூறி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த செயலி நீக்கப்பட்டது. இந்நிலையில் சீனா ராணுவத்தினரின் அத்துமீறிய செயலால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. 

 

இதையும்படிங்க: 8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...!

இந்திய வீரர்களை திட்டமிட்டு கொன்ற சீனாவின் பொருட்களை இனி வாங்க மாட்டோம் என மக்கள் முடிவெடுத்து வருகின்றனர்.  பல்வேறு வணிக கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கூட சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென மக்களுக்கு அறைக்கூவல் விடுத்துள்ளனர்.  இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க:  “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் தனது செல்போனில் இருந்து டிக்-டாக், ஹலோ ஆப்களை நீக்கிவிட்டதாகவும், அதன் கணக்குகளை டெலிட் செய்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் “நான் எனது டிக்-டாக் மற்றும் ஹலோ செயலியை டெலிட் செய்துவிட்டேன்... நீங்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார். ஜிப்ரானின் தேசப்பற்று மிக்க இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல் சிலரோ உங்களுடைய செல்போன், லேப்டாப் என பல பொருட்கள் சீனா தயாரிப்பாக இருக்கலாம்... அதையும் அழித்துவிடுவீர்களா? என தேவையற்ற கேள்விகளை கேட்டுள்ளனர். 

Deleting my accounts in . You ? pic.twitter.com/uMopEXM4bZ

— Ghibran (@GhibranOfficial)
click me!