பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகினர்

By Ganesh AFirst Published Dec 12, 2022, 1:49 PM IST
Highlights

வயதுமூப்பு காரணமாக உயிரிழந்த பாடகி சுலோச்சனா சவானின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கிய சுலோச்சனா சவான் காலமானார். அவருக்கு வயது 92. பிரபல மராத்தி பாடகியான சுலோச்சனா சவான், தனது ஆத்மார்த்தமான லவானி நாட்டுப்புற பாடல்களுக்காக அறியப்பட்டவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மராத்தி நாட்டுப்புற இசைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டார்.

மேலும் மங்கேஷ்கர் சகோதரிகளுடன் சேர்ந்து மராத்தி வரலாற்றில் சிறந்த பெண் பின்னணி பாடகிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுலோச்சனா சவான், மும்பையின் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முந்தினம் காலமானார். சுலோச்சனா சவானின் மகன் விஜய் சவான், தனது தாயாரின் மறைவை உறுதிப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்... இது வேறலெவல் புரமோஷனா இருக்கே...! சென்னை மெட்ரோ ரெயிலை ஆக்கிரமித்த விஜய்யின் ‘வாரிசு’

வயதுமூப்பு காரணமாக உயிரிழந்த பாடகி சுலோச்சனா சவானின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்து வந்த சுலோச்சனா சவானின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு கடந்த மார்ச் மாதம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முதல் ஓபிஎஸ் வரை... ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து மழை பொழிந்த அரசியல் தலைவர்கள்

click me!