
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக வாரிசு திரைப்படம் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் வாரிசு படத்தை தயாரித்து இருக்கிறார். தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். வாரிசு படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் தமிழகத்தில் வெளியிட உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒண்ணுமே செய்யாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து பல லட்சம் சம்பளம் வாங்கும் ராம்! எவ்வளவு தெரியுமா?
தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரெயில் மூலம் வாரிசு படத்தை வேறலெவலில் புரமோட் செய்து வருகின்றனர்.
இதற்காக சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சென்னை முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. சென்னை மெட்ரோ ரெயிலில் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து சொல்ல... கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த ரஜினிகாந்த்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.