
நடிகர் பரத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'மிரள்'. இதில் வாணி போஜன் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பரபரப்பான காட்சிகளுடன் 115 நிமிடங்கள் ஒளிபரப்பான இந்த திரைப்படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தை டெல்லி பாபு ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே, இயக்குனர் சக்திவேலின் கதை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது மட்டுமின்றி படமும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
சமூக வலைத்தளத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் காமென் டிபி! கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சக்திவேலுக்கு பாம்பு கடித்ததன் காரணத்திற்காக தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது உடல் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.