சமூக வலைத்தளத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் காமென் டிபி! கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!

By manimegalai a  |  First Published Dec 11, 2022, 8:18 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை தன்னுடைய 72 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் இவருடைய பிறந்தநாள் காமன் டிபி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 


கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இவரின் 72 ஆவது பிறந்தநாள் நாளைய தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளார். எனவே இன்றைய தினமே, இவருடைய ரசிகர்கள் அவருடைய புகைப்படங்கள் மற்றும் காமன் டிபி வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினிகாந்துக்கு கூறுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறையும் பல ரசிகர்கள் அவருடைய வீட்டின் முன்னர் குவிந்து வழக்கம் போல் தங்களின் வாழ்த்து மழையை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதிலும் ரஜினிகாந்த்... எங்காவது வெளியூருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறையும் வெளியில் சென்றுவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறையும் வெளியில் செல்வாரா? அல்லது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வீட்டில் இருப்பாரா என்பது தெரியவில்லை.

Latest Videos

தாறுமாறாக கிழிந்த பேன்ட்டில்... தொடையை காட்டியபடி கும்முனு போஸ் கொடுத்த நயன்தாரா! வைரலாகும் ரீசென்ட் போட்டோஸ்!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 'ஜெயிலர்' படம் உருவாகி வந்தாலும், அந்த படத்தின் ரிலீசுக்கு  முன்னதாகவே, இந்த வாரம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவான பாபா திரைப்படம், ரீ ரிலீஸ் செய்யப்பட்டு... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிவாஜி திரைப்படத்தையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

அமுல் பேபி போல் அழகு.. முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா - சாயிஷா ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள... காமென் டிபி ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.  இந்த காமென் டிபியில் ரஜினிகாந்த்... பாபா படத்தின் கெட்டப்பில், பாபா முத்திரையை காட்டியபடி நிற்பது போலவும், அவரை சுற்றி ரசிகர்கள் இருப்பது போலவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

 

click me!