மேடை நிகழ்ச்சியில், அளவுக்கு அதிகமாக கவர்ச்சி உடை அணைந்து அனிருத்துடன் ஜோனிதா காந்தி பாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தோ கனடிய பாடகியான ஜோனிதா காந்தி, தற்போது ஸ்ரேயா கோஷலுக்கு நிகரான இளம் பாடகியாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடிவரும் இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
அந்த வகையில், தற்போது பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் இணைந்து கலை நிகழ்ச்சி ஒன்றில் பர்ஃபாம் செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது. பொதுவாக இசை நிகழ்ச்சிகள் என்றால் அதிக கவர்ச்சியை காட்டும் நடிகையாகவும், பாடகியாகவும், அறியப்படுபவர் ஆண்ட்ரியா தான். இவருடைய பாடலை கேட்பதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் இவருடைய கவர்ச்சியை கண்டு களிப்பதற்காகவே இவரின் இசை நிகழ்ச்சிக்கு வருவது உண்டு.
ஆனால் இவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இசை நிகழ்ச்சி மேடையில் பிகினி உடை போல் அணிந்து மேலே கோட் போட்டபடி, ஆட்டம் பாட்டம் என ஜோனிதா காந்தி அந்த நிகழ்ச்சி மேடையவே களைகட்ட வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜோனிதா காந்தி சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம், கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் திரை உலகில் பாடகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து, இவருடைய குரல் பல ரசிகர்களை கவர்ந்த நிலையில்... பல படங்களில் பாடும் வாய்ப்பினை பெற்றார்.
குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்தான பாடகியான இவர், அவர் இசையில் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் கோச்சடையான், காற்று வெளியிடை, 24, வேலைக்காரன், இரும்புத்திரை, சர்க்கார், பீஸ்ட், லெஜெண்ட் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர்... மேடையில் துள்ளலான கவர்ச்சி உடையில், அனிருத்துடன் பாடல் பாடியபடி பர்ஃபாம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.