கமலின் ஆளவந்தான்.. அவருக்கு "Body Double" போட்டது இந்த பிரபல நடிகர் தான் - 22 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!

Ansgar R |  
Published : Dec 17, 2023, 07:57 AM IST
கமலின் ஆளவந்தான்.. அவருக்கு "Body Double" போட்டது இந்த பிரபல நடிகர் தான் - 22 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!

சுருக்கம்

Aalavandhan Re-Release : கடந்த 2001ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த படம் தான் உலக நாயகனின் ஆளவந்தான்.

ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் "தாயம்" என்கின்ற கமல்ஹாசன் அவர்கள் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பது பலர் அறியாத உண்மை. 

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து மக்களை பிரமிக்க வைத்த இந்த படம் அண்மையில் ரீ-ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகரின் செயல்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளதாக அவரே வருத்தப்பட்டு பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகர் வேறு யாருமல்ல, பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ரியாஸ் கான் தான்.

பிரபுவின் மகளுக்கு நடந்த இரண்டாவது திருமணம்.. முதல் கணவரை பிரிய காரணம் என்ன? அவர் யார்? பயில்வான் தந்த தகவல்!

ஆளவந்தான் திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு "Body Doubleளாக" நடித்தது ரியாஸ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 22 ஆண்டுகளில் அவர் அந்த படத்தில் பணியாற்றியது குறித்து யாருமே பேசியதில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் ரியாஸ் கான். 

சரி "Body Double" என்றால் என்ன? 

ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகருக்கு பதிலாக, சில பல காட்சிகளில் அவருடைய உடல் அமைப்பை ஒத்த உடல் அமைப்பு கொண்ட மற்றொரு நடிகர் அந்த இடத்தில் நடிப்பார். பெரும்பாலும் இதில் அவருடைய முகம் வெளியில் தெரியாது, மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கும் பொழுது அவருடைய முகம் மறைக்கப்படும். இதைத்தான் Body Double என்று கூறுவார்கள். 

முதல்வர் நிவாரண நிதிக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த அமீர்! முழு சம்பளத்தை கொடுத்த பூச்சி முருகன்!

குறிப்பாக ஆளவந்தான் திரைப்படத்தில் நந்து கதாபாத்திரத்தில் நடித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய உடல் அமைப்பை ஒத்த உடலை கொண்டிருந்ததால் படம் முழுக்க பல இடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு Body Double செய்துள்ளார் ரியாஸ்கான். ஆனால் இந்த தகவல் இதுவரை படக்குழுவினர் யாருமே சொன்னதில்லை. இன்று சிலர் பேசுவது கூட நான் அவர்களிடம் இதைப்பற்றி பேசியதால் தான் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் ரியாஸ் கான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?