“சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு பதில் நடித்திருக்க வேண்டியது இவரா?.. பிரபல நடிகரே பேசிய வைரல் வீடியோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 22, 2021, 01:51 PM IST
“சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு பதில் நடித்திருக்க வேண்டியது இவரா?.. பிரபல நடிகரே பேசிய வைரல் வீடியோ!

சுருக்கம்

இந்த படத்தில் ஆர்யாவிற்கு பதிலாக கார்த்தி நடிக்கவிருந்ததாக அவரே பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 1970ல் சென்னையில் நடந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் கொண்டு வந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டருக்கு பதிலாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வடசென்னையின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்துள்ளதாக படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகிறது. 

 

இதையும் படிங்க: ‘மாமியாருக்கு பாய் பிரண்ட் தேவை’... மருமகள் கொடுத்த வினோத விளம்பரம்... 2 நாளைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

படத்தில் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் மக்கள் மனதில் நிற்கிறது. ஆர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய மைல்கல் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது. 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம்?... வருங்கால கணவர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்...!

இந்நிலையில் இந்த படத்தில் ஆர்யாவிற்கு பதிலாக கார்த்தி நடிக்கவிருந்ததாக அவரே பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மெட்ராஸ் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி “நானும் ரஞ்சித்தும் சேர்ந்து இதற்கு முன்னதாக ஒரு படம் பண்றதா இருந்தது. அதற்கு பெயர் சார்பட்டா. ஆனால் ரஞ்சித்துடன் உடனடியாக பணியாற்ற வேண்டும் என்பதால் மெட்ராஸ் பட வேலைகளை ஆரம்பித்தோம்” என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ