பிரபல நடிகர் மறைவால்... சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!

Published : Jul 22, 2021, 12:04 PM IST
பிரபல நடிகர் மறைவால்... சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!

சுருக்கம்

மூத்த மலையாள நடிகர் கே.டி.எஸ் படனாயில், உடல்நல குறைவு காரணமாக கொச்சியில் உள்ள இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 88.  

மூத்த மலையாள நடிகர் கே.டி.எஸ் படனாயில், உடல்நல குறைவு காரணமாக கொச்சியில் உள்ள இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

நடிகர் படனாயில், வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக ஜூலை 19 ஆம் தேதி மருத்துவமனையில் செக்கப்பட்டார். பின்னர், அவர் இருதய பராமரிப்பு பிரிவுக்கு மாற்றிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர், ஆனால் சிகிச்சை பழநின்று இன்று காலை 6.40 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் மற்றும், மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு நாடக கலைஞராக இருந்து பின்னர், 1990 ஆம் ஆண்டு வெளியான Aniyan Bava Chettan Bava என்கிற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் சுமார் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் துணை நடிகராக தன்னுடைய நடிப்பை தரூபமாக வெளிக்காட்டியுள்ளார்  படனாயில். சுமார் 20 ஆண்டுகாலகா வெள்ளைத்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்த இவரது இழப்பு மலையாள ரசிகர்கள் மற்றும் பிரபலங்களையும் சோகமடைய செய்துள்ளது. மேலும் இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பின்ராயி விஜயன் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லியோ பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜன நாயகன்.... முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி...!
கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு