பிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2020, 5:41 PM IST
Highlights

தற்போது 93 வயதான பாசு உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களையும், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தி சினிமாவின் மூத்த இயக்குநரான பாசு சாட்டர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாசு சட்டர்ஜி தனது ஆரம்ப காலத்தை பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் வரையும் கார்ட்டூனிஸ்டாக தொடங்கினார். அதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர், பாசு பட்டாச்சார்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் 1969ம் ஆண்டு வெளியான “சாரா ஆகாஷ்” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

1970 களில் சோட்டி “சி பாத்”, “சிட்சோர்”, “ரஜினிகந்தா”, “பேட்டன் பேட்டன்”, “மெய்ன்” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பாசுவின் சிறிய பட்ஜெட் படங்களில் மிதுன் சக்கரவர்த்தி, ராஜேஷ் கண்ணா, ஜீதேந்திரா, தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி, நீது சிங் உட்பட பல புகழ் பெற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏராளமான இந்தி படங்களை இயக்கியுள்ள பாசு, சில வங்க மொழிப்படங்களையும் இயக்கியுள்ளார். இறுதியாக பாசு “திரிசங்கு” என்ற பெங்காலி படத்தை இயக்கினார். பல படங்களுக்கு வசனம் எழுதியும், சில படங்களை தயாரித்தும் வாழ் நாள் முழுவதும் சினிமாவை மட்டுமே நேசித்து கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: “போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...!

தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தொடர்களையும் இயக்கியுள்ளார். “துர்கா” என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற பாசு, மும்பையில் வசித்து வந்தார். தற்போது 93 வயதான பாசு உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களையும், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த பாசுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அதில் ஒருவரான ரூபாலி குஹா திரைப்பட இயக்குநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!