
1976 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படமான 'ஏகாகினி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஜி.எஸ்.பணிக்கர். இவரது முதல் படமான 'ஏகாகினி' திரைப்படம் எம்.டி. வாசுதேவன் நாயரின் கருட சந்திரன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் ரவிமேனன் மற்றும் ஷோபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த படத்திற்கான மாநில விருது உட்பட பல விருதுகளையும், அனைத்து தரப்பினர் மத்தியிலும் தன்னுடைய முதல் படத்திற்கே பாராட்டுகளை குவித்தார்.
மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
இந்த படத்தை தவிர சேதுவின் புகழ்பெற்ற 'பாண்டவபுரம்' நாவலை பணிக்கர் திரைப்படமாக எடுத்தார். மேலும் ஸ்ரீதரமேனனின் “சஹ்யனின் மகன்” கவிதையை அடிப்படையாக வைத்து குழந்தைகளுக்கான திரைப்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். படங்கள் இயக்கி உள்ளது மட்டும் இன்றி சில படங்களை தயாரித்தும் உள்ளார்.கடைசியாக 2018-ம் ஆண்டு 'மிட்சம்மர் ட்ரீம்ஸ்' என்ற படத்தை தயாரித்தார் பணிக்கர்.
மேலும் செய்திகள்: அடுத்தடுத்த தோல்வி படம்... மளமளவென குறைந்த சூப்பர் ஸ்டார் சம்பளம்! வெளியான 'ஜெயிலர்' பட சம்பள விவகாரம்!
இதை தொடர்ந்து திரைப்பட பணிகளில் இருந்து விலகியே இருந்த, பணிக்கர் சில வருடங்களாக... புற்றுநோயால் அவதி பட்டுவந்த அவர், அதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.