அதிமுகவில் போட்டியிட விருப்பமனு அளித்த பிரபல இயக்குனர் ரவி மரியா!

By manimegalai aFirst Published Mar 2, 2021, 11:22 AM IST
Highlights

இந்நிலையில், அதிமுக கட்சியில் இணைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்து, பிரபல இயக்குனர் மற்றும் காமெடி நடிகருமான ரவி மரியா விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல் என தீவிரங்காட்டி வருகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கவேண்டுமென அக்கட்சி அறிவித்துள்ளது. 

இந்நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஏராளமான அதிமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்: இது என்ன கூத்து?... பட்டுப்புடவையை பாதியாக வெட்டி விட்டு...கால்களை முழுசா காட்டிய குக் வித் கோமாளி பவி...!
 

இந்நிலையில், அதிமுக கட்சியில் இணைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்து, பிரபல இயக்குனர் மற்றும் காமெடி நடிகருமான ரவி மரியா விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். மிளகா, ஆசை ஆசையாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ரவி மரியா. மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, மனம் கொத்திபறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மற்றும் இரண்டாம் குத்து என பல படங்களில் தன்னுடைய காமெடி மற்றும் முரட்டு தனமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: வெள்ளை உடையில்... துளியும் மேக்அப் இன்றி அழகில் மிரட்டும் ஸ்ரீதிவ்யா! சொக்கி போன ரசிகர்கள்!
 

ரவிமரியா கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. துணை இயக்குனராக வாழ்க்கையை துவங்கி, இயக்குனர், நடிகர், என தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்ட ரவி மரியா? அரசியல் வாதியாகவும் அவதாரம் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!