ஆக்ஷனில் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்! கொள்ளை அழகில் லாஸ்லியா... வெளியானது 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்!

Published : Mar 02, 2021, 10:26 AM IST
ஆக்ஷனில் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங்! கொள்ளை அழகில் லாஸ்லியா... வெளியானது 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்!

சுருக்கம்

பிக்பாஸ் லாஸ்லியா, முதல் முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள, 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  

பிக்பாஸ் லாஸ்லியா, முதல் முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள, 'ப்ரெண்ட்ஷிப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில்,  இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லாஸ்லியா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'ப்ரெண்ட்ஷிப்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அர்ஜுனும், காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. "பயம் என்பது ஒரு உணர்வு", அது ஒரு தடவை போய் விட்டால் திரும்ப வரவே வராது’ என்ற பஞ்ச் டயலாக்குடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டீசர் விறுவிறுப்பாக உள்ளது. ஹர்பஜன்சிங் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். பேரழகியாக வந்து அசர வைக்கிறார் லாஸ்லியா.  ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டராகவே நடிக்கும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். சாந்தகுமாரின் ஒளிப்பதிவில், தீபக் துவாரகாந்தின் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!