
“பரியோறும் பெருமாள்” படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் உடன் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படங்களில் காமிட்டாகியுள்ளதால் படு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில், கிராமிய கலைஞர் மாரியம்மாள் பாடிய 'கண்டா வரச்சொல்லுடா' பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகியது. இந்த பாடலுக்கு தனுஷ் ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த பாடல் ஒரு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்... கலைப்புலி தாணு 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற, செகண்ட் சிங்கள் பாடல், மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே வெளியான நிலையில், இந்த பாடலின் பெயருடன் சேர்த்து, ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். 'பண்டாரத்தி புராணம்' என்று துவங்கும் இந்த பாடல் நாளை சரியாக 5 :03 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், 'கர்ணன்' திரைப்படம்... ஏப்ரில் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.