நடிகை சிம்ரன்... தகதகவென ஆடவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
90-ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை சிம்ரன். ரொமான்டிக் காமெடி திரைப்படமான 'விஐபி' படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இவரின் முதல் படமே சுமார் 100 நாட்களுக்கு மென் திரையரங்கில் ஓடியதால், முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என பெயர் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி, என தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார் சிம்ரன். இவரின் எதார்த்தமான நடிப்பை தாண்டி, சிம்ரனின் நடன அசைவுகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட சில ஹீரோக்களின் காதல் சர்ச்சையிலும் சிக்கிய சிம்ரன்... திரைப்பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் சுதாரித்து கொண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தீபக் பாஹா என்பவரை 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது சிம்ரனுக்கு 2 மகன்களும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் வலுவான குணச்சித்திர நாயகியாக மாறி முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
மேலும் தற்போது சபதம், வணங்காமுடி, அந்தகன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இவரின் கைவசம் உள்ள நிலையில்... அடுத்தடுத்து வெளியாக உள்ளது. விரைவில் சிம்ரனின் மகனும் நடிக்க வருவார் என கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் செம்ம ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் தற்போது பழைய பாடலில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட 'தக தகதகவென ஆடவா' பாடலுக்கு கிழிந்த பேண்டில் அவரின் ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.