அடுத்த பட பணிகளை துவங்கும் கார்த்திக் சுப்புராஜ்? மகான் 2 லோடிங்? விக்ரம் வெளியிட்ட மாஸ் புகைப்படங்கள் வைரல்!

Ansgar R |  
Published : Feb 11, 2024, 04:43 PM IST
அடுத்த பட பணிகளை துவங்கும் கார்த்திக் சுப்புராஜ்? மகான் 2 லோடிங்? விக்ரம் வெளியிட்ட மாஸ் புகைப்படங்கள் வைரல்!

சுருக்கம்

Vikram Mahaan 2 : கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகான்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் "பீட்ஸா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் கார்த்திக் சுப்புராஜ். தனது தனித்துவமான கதையை அம்சங்களால் மக்கள் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பு பெற்ற கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, மெர்குரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தனுஷ் அவர்களின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு சியான் விக்ரம் அவர்கள் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வெளியிட்ட மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் மகான் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தற்பொழுது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சூரிக்கு தொடரும் பன்னாட்டு அங்கீகாரம்.. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா - திரையிடப்படும் கொட்டுக்காளி!

மேலும் பிரபல நடிகர் விக்ரம் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் மகான் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் முடிவுற்றதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் இரண்டு புதிய புகைப்படங்களை வெளியிட்டு மகான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதா என்ற கேள்வுக்குரியோடு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் இன்னும் எந்த படங்களும் வெளியாகவில்லை. பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்களான் படம் மக்கள் மத்தியில் மிக மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டில் இருந்தே அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரும் உலகமும் நீங்களே.. மகன்களோடு சில்லென்ற பயணம் - கியூட் வீடியோ வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?