Etharkkum Thunindhavan: இரண்டு ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு, திரையரங்கில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இன்னும் 1 மாதம் கூட ஆகாத நிலையில் OTT தளத்தில் வெளிவர உள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யாவின் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சூர்யாவுடன் சேர்ந்து நடித்த நட்சத்திரங்கள்:
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சூரி, வினய் ராய், புகழ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் இரண்டு ஆண்டு காத்திருப்பு:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் படம் எதற்கும் துணிந்தவன். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்றபடங்கள் OTTயில் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம்:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும், வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது.
வசூல் விவரம்:
இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ 200 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ் எப்போது?
இரண்டு ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு, திரையரங்கில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இன்னும் 1 மாதம் கூட ஆகாத நிலையில் OTT தளத்தில் வெளிவர உள்ளது. இந்நிலையில், தற்கும் துணிந்தவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 7-ந் தேதி இப்படம் சன் நெஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.