
சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன், ஜூலி, தமரைச் செல்வி, சுருதி, அபிராமி ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் கடந்த வாரம் மணி டாஸ்க் நடத்தப்பட்டது. அதன்படி பணப்பெட்டி ஒன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டது. அதன் மதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. முதலில் ரூ.3 லட்சத்தில் தொடங்கிய அதன் மதிப்பு இறுதியில் ரூ.15 லட்சத்தில் வந்து நின்றது. அப்போது அந்த பெட்டியை எடுக்க சுருதி, ஜூலி ஆகிய இருவர் முனைப்பு காட்டினர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சில டாஸ்க்குகள் வைக்கப்பட்டன. அதில் அதிகப்படியான டாஸ்க்குகளில் வெல்பவர்களுக்கு அந்த ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட டாஸ்க்குகளில் சுருதி வெற்றிபெற்றதன் காரணமாக அவர் ரூ.15 லட்சம் பணப்பெட்டி உடன் உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஒவ்வொரு வார இறுதியில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷனில் அனைவரும் இடம்பெற்று இருந்தனர். இதில் குறைவான வாக்குகளை பெற்று சுருதி தான் கடைசி இடத்தில் இருந்தார். இருப்பினும் தற்போது பணப்பெட்டி உடன் அவர் வெளியேறிவிட்டதால், அவருக்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் தான் வெளியேற்றப்பட உள்ளார்.
அதன்படி பார்க்கும்போது நடிகை அபிராமி தான் தற்போது குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். ஆதலால் அவர் வெளியேற்றப்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஒரு வேளை டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டால், அவருடன் சேர்ந்து ரம்யா பாண்டியனும் வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Manmadha Leelai : மன்மதலீலை படம் ரிலீசாகவில்லை.. காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன்?- படக்குழு விளக்கம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.