Manmadha Leelai : மன்மதலீலை படம் ரிலீசாகவில்லை.. காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன்?- படக்குழு விளக்கம்

Published : Apr 01, 2022, 11:37 AM IST
Manmadha Leelai : மன்மதலீலை படம் ரிலீசாகவில்லை.. காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன்?- படக்குழு விளக்கம்

சுருக்கம்

Manmadha Leelai : மன்மதலீலை படத்தின் முதல் காட்சியைக் காண ஆவலோடு டிக்கெட் எடுத்து காத்திருந்த ரசிகர்கள், படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மன்மதலீலை. தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களின் நாயகன் அசோக் செல்வன் தான் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

மன்மதலீலை திரைப்படம் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இப்படத்தின் முதல் காட்சியைக் காண ஆவலோடு டிக்கெட் எடுத்து காத்திருந்த ரசிகர்கள், படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், இப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தொழில்நுட்ப கோளாறு காரணமாக மன்மதலீலை திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் இப்படம் திரையிடப்படும். ஃபன் பண்ணுங்க.. என்ஜாய் பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்...  Director Nelson : விஜய்க்காக நெல்சன் எடுத்த புதிய அவதாரம்.... பீஸ்ட் புரமோஷனில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?