Cook with comali: எப்போதும் மற்றவர்களை ஜாலி மோடில் வைத்திருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி, இதன் இரண்டு இந்த சீசன்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன்3 பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் கடந்த ஜனவரி மாதம் துவங்கி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
எப்போதும் மற்றவர்களை ஜாலி மோடில் வைத்திருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி, இதன் இரண்டு இந்த சீசன்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன்3 பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் கடந்த ஜனவரி மாதம் துவங்கி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 3:
விஜய் டிவியால் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது. உலக புகழ் பெற்ற ஏர் ரகுமான் சீசன் 2 வில் இந்த நிகழ்ச்சியை தான் பார்ப்பதாக தெரிவித்திருந்தார். இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. மொத்தம் 10 பேர் கோமாளிகள் கலந்து கொண்ட நிலையில், இதில் குறிப்பாக பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலையின் கோமாளித்தனம் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும்.
குக் வித் கோமாளி போட்டியாளர்கள்:
இந்த 3வது சீசனில் ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியின் கதைக்களம்:
இந்த நிகழ்ச்சியின் சுவாரசியமே கோமாளிகள் தான். குக்குகளை சமையல் செய்யவிடாமல் தடுப்பது, சமையலில் சொதப்புவது என இவர்கள் அடிக்கும் லூட்டி பார்ப்பவர் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
செஃப் தாமு வெளியேறிருகிறாரா?
இந்த நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய வெளியான, ப்ரோமோவில் செஃப் தாமு " நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன்" என கண்ணீர் மல்க கூறுகிறார். இதனை கேட்டு கோமாளிகள் போட்டியாளர்கள் கதறி அழுகின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னது ? செஃப் தாமு நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா என்று வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.