dulquer salmaan has covid : கொரோனாவால் பாதிக்கப்பட்ட துல்கர் சல்மான்..பிரபலங்களை குறி வைத்து தாக்கும் வைரஸ்..

Kanmani P   | Asianet News
Published : Jan 20, 2022, 07:17 PM IST
dulquer salmaan has covid : கொரோனாவால் பாதிக்கப்பட்ட துல்கர் சல்மான்..பிரபலங்களை குறி வைத்து தாக்கும் வைரஸ்..

சுருக்கம்

dulquer salmaan has covid : பிரபல நடிகர் துல்கர் சல்மான் தான் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இவர் தற்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்கி வரும் ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதோடு வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் குஷி கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் தான் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ‘செகன்ட் ஷோ’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் துல்கர் சல்மான். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதில் சல்மானின் நடிப்பு  பேசும்படியாக அமைந்தது. அதற்கு அடுத்தாக இவர் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அனைத்து தரப்பினருக்குமான படம் என நேஷனல் அவார்டுடன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும் அடித்தது. இப்படத்தின் பைசி கதாபத்திரத்திற்காக கொண்டாடப்பட்டார் துல்கர்.  பின்னர் இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. 

இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நஸ்ரியாவுடன் நடித்த ‘வாயை மூடி பேசவும்’ படம் துல்கருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது. பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ படம் வெளியானது. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  மலையாள நடிகர் மம்முட்டியின் இரண்டாவது மகனான துல்கர் குரூப் பட வெற்றிக்கு பிறகு தற்போது நடன இயக்குனர் பிருந்தா 
 இயக்கி வரும் ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்