'Me Too' விவகாரம்..இனி பேசக்கூடாது..லீனா மணிமேகலை,சின்மயிக்கு தடை விதித்த கோர்ட்..

By Kanmani PFirst Published Jan 20, 2022, 6:21 PM IST
Highlights

சுசி கணேசன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கையில் அவர் மீதான 'Me Too' புகார் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட லீனா மணிமேகலை,சின்மயிக்கு கோர்ட் தடை விதித்துள்ளது.

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி, பாலியல் புகாரை முன் வைத்ததில் இருந்து தொடர்ந்து பல பெண்கள் மீடூ ஹாஷ்டாக் மூலம் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிதான் தப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சுசிகணேசன் மூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவை பதிவிட்டு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார். லீனா மணிமேகலை குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  சுசி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது... "உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்து விட்டது. இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களோடு சகதியில்  இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ? அரை மணி நேர பேட்டியில் அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுப்பை பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ அவன் எஞ்சின் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.

 

அனைத்தும் பொய் மூட்டைகள் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் என்னிடம் இருக்கிறது அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப்படுத்திய அந்த பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன் இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற மீடூ இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் 'சமுதாய வைரஸ்களை' களை எடுப்பதற்கு  பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தார். 

அதோடு லீனா மணிமேகலைக்கு எதிராக சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் வழக்கும் தொடர்ந்துள்ளார் சுசிகணேசன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சுசிகணேசன் புதிதாக இயக்கவுள்ள படத்திற்கு இளையராஜா இசையமைவுள்ளார் என்கிற தகவல் அறிந்த சின்மயி மற்றும் லீனா மணிமேகலை இருவரும் மீண்டும்'Me Too' விவகாரத்தை கிளற ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்கள் வாயிலாக பாலியல் புகார் குறித்து லீனா மணிமேகலை நியாயம் கேட்க..கடுப்பான சுசிகணேசன் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

தான் முன்பு தொடுத்த வழக்கு முடிவுக்கு வரும் வரை அவ்விருவரும் தன்னை பற்றி அவதூறு பரப்ப கூடாதெனவும். அதரைமட்ட குற்றசாட்டுகளை முன்வைத்தது தன்னை களங்கப்படுத்தியதால் 1 கொடியே 10 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெற்று தரவேண்டும் என்றும் கோர்ட்டில் முறையிட்டார் சுசிகணேசன். இந்த எ\வழக்கை விசாரித்த நீதிபதி சுசிகணேசன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவும், வழக்கு முடிவுக்கு வரும் வரை இதுகுறித்து சின்மயி,லீனா மணிமேகலை இருவரும் வெளியில் பேசக்கூடாது என்றும் தடை விதித்துள்ளார்.

click me!