Dhanush divorce :தனுஷ்- ஐஷ்வர்யாவை சேர்த்து வைக்க தூது போகும் காமெடி நடிகை..!இவங்கதான் அந்த சமாதானப் புறாவா..?

Kanmani P   | Asianet News
Published : Jan 20, 2022, 05:03 PM ISTUpdated : Jan 20, 2022, 05:42 PM IST
Dhanush divorce :தனுஷ்- ஐஷ்வர்யாவை சேர்த்து வைக்க தூது போகும் காமெடி நடிகை..!இவங்கதான் அந்த சமாதானப் புறாவா..?

சுருக்கம்

தனுஷ் -ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த இருவருக்கும் மிகவும் நெருங்கிய குடும்ப நண்பரான காமெடி நடிகை ஒருவரை தனுஷ் குடும்பம் தூதாக அனுப்பியுள்ளது என தகவல் சொல்கிறது...

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவை 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். பல வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு நிலை வந்த போது இருதரப்பு குடும்பமும் பேசி அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துள்ளனர். இது நடந்து 7 வருடங்களுக்கு மேல் இருக்குமாம்.

அதன்பின் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனுஷ் பற்றிய சில புகார்கள் ஐஸ்வர்யாவுக்கே நேரடியாக பறந்துள்ளன. அதில் தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை முற்றி இருக்கிறது.

இந்த விவகாரம் ரஜினிக்கு தெரிந்தும் அவர் சரியாகிவிடும் என அமைதி காத்து வந்துள்ளார். ஆனால் தனுஷை பற்றி திரையுலக வட்டாரத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவே இதுதொடர்பாக ஒரு நடிகையிடம் நேரடியாக கேட்டுள்ளார். அந்த நடிகை விஷயத்தை தனுஷ் காதில் ஓதிவிட, அது தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இருவரும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர்.

இந்த விஷயத்தை இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்க... அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார் ரஜினி. இருவரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, குழந்தைங்க இருக்காங்க... அத மனசுல வச்சு முடிவெடுங்க என அட்வைஸ் பண்ணி உள்ளார். ஆனால் இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. 2 வாரங்களாக சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லாததால், இனி நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என ஒதுங்கிவிட்டாராம் ரஜினி. இதையடுத்து தான் இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்கள். இதன்பின் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்களாம். இருவரின் பிரிவை நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து சமீபத்தில் பேசியுள்ள தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.. இருவரும் விவாகரத்து செய்யவில்லை..கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுதான்.. இது வெறும் குடும்ப சண்டை விரைவில் சரியாகிவிடும் என கூறியுள்ளார்.. அதோடு தற்போது ஐதராபாத்தில் இருக்கும் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுரை குறியுள்ளதாகவும். விரைவில் இருவரும் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறிய கஸ்தூரி ராஜா  குடும்ப பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே குடும்ப உறுப்பினர்கள் பேசி எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால்..நண்பர்களின் உதவியை நாடியுள்ளதான் தனுஷ் குடும்பம்..அந்த வகையில் தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு மிகவும் நெருங்கிய தோழியான ஆர்த்தியிடம் உதவி கேட்டுள்ளனராம்..காமெடி நடிகையான ஆர்த்தி தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் மிகவும் நெருங்கமான குடும்ப நண்பராக இருந்து வருகிறார். இவர் தன் கணவருடன் அடிக்கடி தனுஷ் இல்லத்தில் தங்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு..

இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து மறு பரிசீலனை செய்ய ஆர்த்தி தான் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் சொல்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ