துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் அதிரடி கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது !

Published : Jun 23, 2023, 11:19 PM IST
துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் அதிரடி கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது !

சுருக்கம்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின், கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது  படக்குழுவினர் வெளியிட இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   

Zee Studios மற்றும்  Wayfarer Films இணைந்து வழங்கும்  'கிங் ஆஃப் கோதா', ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும்  இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு  தகவலுக்காகவும், ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்,  இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது.  அதிலும் துல்கர் சல்மானை 'ராஜாவாக' சித்தரித்திருப்பது,  ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது. 

எங்க குழந்தைக்கு பேரு தேர்வு செஞ்சாச்சு! பெயர் சூட்டு விழா பற்றி அறிவித்த ராம் சரண் - உபாசனா ஜோடி!

இப்படத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும்,  பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட Zee Studios மற்றும் Wayfarer Films  நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

அஜித் - ஷாலினி முதல் கௌதம் - மஞ்சிமா வரை ரீல் ஜோடியாக நடித்து.. ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள்!

இப்படம் தனித்துவமான கதையுடன், மிரட்டலான உருவாக்கத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் புதுமையான படைப்பாக மிகப்பெரும் பொருட்செலவில், Zee Studios மற்றும்  Wayfarer Films நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்? நடுரோட்டில் நடந்த ஆதிரை திருமணம்! கீழே விழுந்து கதறிய ஜனனி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!