சிம்புவால் வந்த வம்பு... பெப்சியுடன் உச்சகட்ட மோதலில் தயாரிப்பாளர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 8, 2021, 10:51 AM IST
Highlights

 பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சிம்பு மீதான சர்ச்சைகள் ஏராளம், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவதில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றச்சாட்டுக்கள் ஏராளம். இதனால் நடுவில் சினிமாவில் நடிக்காமல் கூட சிம்பு இருந்து வந்தார். இதனை அடுத்து பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகே சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை நடித்து முடிந்துள்ளார்.

இந்நிலையில் சிம்புவால் பெப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிம்பு படத்தின் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்பு இருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் நேற்று திடீரென தயாரிப்பாளர் சங்கம் இனிமேல் பெப்சி தொழிலாளர்கள் இன்றி படப்பிடிப்பு நடத்துவோம் என அறிவித்துள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இப்படியொரு முடிவெடுத்தது பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. 

இதுகுறித்து பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அதில், சிம்புவிற்கும்  தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சனைகள் உள்ளது. அதை பேசி முடிக்க வேண்டுமென ஒரு வாரத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். திருப்பதி சாமி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார், சிவசங்கர் என்ற தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் மூலமாக செல்வகுமார் என்ற தயாரிப்பாளரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்த தயாரிப்பாளர்களுக்கு படமும் நடித்து கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை எனக்கூறினார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் முடித்து கொடுத்தப் பிறகு சிம்பு பட ஷூட்டிங்கிற்கு செல்லலாம் எனத் தெரிவித்தார்கள். 

சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போடாமல், பெப்சி தொழிலாளர்கள் சங்கத்தை கட்டுப்படுத்த நினைப்பது தவறானது. சிம்புவால் பெப்சிக்கு இப்படியொரு பிரச்சனை உருவாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சியை அடியாட்கள் போல் நடத்துவதை ஏற்க முடியாது. நான் தன்னிச்சையாக செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் என் மீது குற்றச்சாட்டுவது உண்மையானது அல்ல. பெப்சி எப்போதும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக பல்வேறு விஷயங்களை விட்டு கொடுத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான ஒப்பந்தத்தை மீறி எந்த ஒரு விஷயத்தையும் பெப்சி செய்யவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

click me!