ரத்தம் சொட்ட சொட்ட... வெளியான சன்னி லியோன் நடிக்கும் 'ஷீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

Published : Aug 07, 2021, 08:13 PM IST
ரத்தம் சொட்ட சொட்ட... வெளியான சன்னி லியோன் நடிக்கும் 'ஷீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

சுருக்கம்

சன்னி லியோன் கதையின் நாயகியாக அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்திருக்கும் ‘ஷீரோ' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதில் சுன்னி லியோன் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறார். 

ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ', இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,‘ஷீரோ' ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில்  உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. 

சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.' என்றார்.

‘ஷீரோ'  பட அனுபவம் குறித்து நடிகை சன்னி லியோன் பேசுகையில், ‘ஷீரோ' போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷீரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.' என்றார்.

சன்னி லியோன் கதையின் நாயகியாக அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்திருக்கும் ‘ஷீரோ' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதில் சுன்னி லியோன் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!