'பீஸ்ட்' படத்தில் நடிப்பது யார்.. யார்..? சன் பிச்சர்ஸ் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு..!

By manimegalai aFirst Published Aug 7, 2021, 8:00 PM IST
Highlights

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் யார் யார்? நடிக்க உள்ளனர் என்பது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் யார் யார்? நடிக்க உள்ளனர் என்பது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.

அவ்வப்போது இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று மதியம் இந்த படத்தில் பிரபல இயக்குனரும் 'சாணிக்காகிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கியுள்ள செல்வராகவன் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

இதை தொடர்ந்து படக்குழு தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் லிலிபுத் ஃபரூக் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஒரே மோஷன் வீடியோவில் மூன்று பேரின் , புகைப்படத்தோடு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, வெளியாகியுள்ள இரண்டாவது மோஷன் வீடியோவில், சைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், மற்றும் அன்குர் அஜித் விக்கல் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த வீடியோக்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது... 

., & join the cast of ! pic.twitter.com/a27SKqlPMD

— Sun Pictures (@sunpictures)

, & join the cast of . pic.twitter.com/BswVNDX2O6

— Sun Pictures (@sunpictures)

click me!