மீரா மிதுன் சர்ச்சை பேச்சால் வெடித்த பிரச்சனை..!! கைது செய்யக்கோரி போலீசில் பரபரப்பு புகார்..!!

Published : Aug 07, 2021, 04:49 PM IST
மீரா மிதுன் சர்ச்சை பேச்சால் வெடித்த பிரச்சனை..!! கைது செய்யக்கோரி போலீசில் பரபரப்பு புகார்..!!

சுருக்கம்

எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பேசி, புதிய பிரச்சனைகளை கூட விலை கொடுத்து வாங்கும் நடிகை மீரா மிதுனை, தற்போது  தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மதுரை மாநகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பேசி, புதிய பிரச்சனைகளை கூட விலை கொடுத்து வாங்கும் நடிகை மீரா மிதுனை, தற்போது  தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மதுரை மாநகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபர்களில் ஒருவர் நடிகை மீரா மீதும். வாரிசு நடிகர்களால் தான் தன்னுடைய வாய்ப்புகள் பறிபோனதாக, விஜய் மற்றும் சூர்யா மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த இவர், ஒரு கட்டத்தில் தவறாக புரிந்து கொண்டு இப்படி பேசியதாக மன்னிப்பும் கேட்டார்.

இதை தொடர்ந்து நடிகை த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தன்னுடைய முகத்தை காப்பி செய்வதாகவும், தன்னை பார்த்து உடைகளை பின் பற்றுவதாகவும் பக்கம் பக்கமாக ரீல் விட்டார். ஆனால் இவர் இது போன்று காட்டு கத்து  கத்தியதை ஒருவர் கூட கண்டு கொள்ளவிலை. எனினும் அவ்வப்போது.. சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக தன்னுடைய காதலருடன் இணைந்து சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், இதற்க்கு ஏகப்பட்ட கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இதனிடையே சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில்... பட்டியலின இயக்குனர்களை விமர்சிக்கும் விதத்தில் பேசி இருந்தார். இதற்காக திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மா.பா.மணி அமுதன் சார்பில் மீரா மிதுனை கைதுசெய்யக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளிக்கபட்டுள்ளது. அந்த புகார் மனுவில், கூறியுள்ளதாவது... 

"நடிகை மீரா மீதுனின் வீடியோவால் கோடிக்கணக்கான பட்டியலின மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளதால் அவரையும்,  அவரது காதலர் அபிஷேக் ஆகியோரையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்