மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியும் வீட்டுக்கு போக விரும்பாத யாஷிகா! இதுதான் காரணம்!

Published : Aug 07, 2021, 03:00 PM IST
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியும் வீட்டுக்கு போக விரும்பாத யாஷிகா! இதுதான் காரணம்!

சுருக்கம்

நடிகை யாஷிகா கோரவிபத்தில், சிக்கி பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது, மருத்துவமையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும், வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதற்கான காரணத்தையும் யாஷிகா ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.  

நடிகை யாஷிகா கோரவிபத்தில், சிக்கி பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது, மருத்துவமையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும், வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதற்கான காரணத்தையும் யாஷிகா ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவானி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. 

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளதாகவும், அதில் தான் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாகவும், வீட்டுக்கு சென்றால் தோழி பவானி நினைவு வரும் என்பதால் வீட்டுக்கு போகாமல், ஃபேமிலி பிரென்ட் ஒருவர் வீட்டில் தங்கி இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்