
தமிழ் சினிமாவில் திகில் ப்ளஸ் காமெடி சப்ஜெக்டை வைத்து வெற்றிக்கொடி கட்டியவர் ராகவா லாரன்ஸ். அவர் இயக்கி நடித்த, ‘முனி', 'முனி 2: காஞ்சனா', 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானவை. இதில் 'முனி 2: காஞ்சனா' திரைப்படம் 'லட்சுமி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, அக்ஷய் குமார் நடிப்பில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமானார் லாரன்ஸ்.
தற்போது ராகவா லாரன்ஸ் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து வரும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள துர்கா படத்தின் சாமியார் கெட்டப் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் நீண்ட தாடி மற்றும் மீசையுடன் ஒரு பழைய தோற்றத்தில் செம்ம டெரராக தோன்றி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.