21 ஆண்டுகளாக வலியோடு வாழும் மம்மூட்டி... அவரே உடைத்த பகீர் உண்மை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 06, 2021, 07:51 PM IST
21 ஆண்டுகளாக வலியோடு வாழும் மம்மூட்டி... அவரே உடைத்த பகீர் உண்மை...!

சுருக்கம்

முன்னணி நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கலந்து கொண்ட பேசிய ஒரு நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்மூட்டி. தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை  மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றவர். 

தமிழில் கூட “மௌனம் சம்மதம்”, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளி பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘ஆனந்தம்’, ‘எதிரும் புதிரும்’, ‘கார்மேகம்’, ‘ஜாக்பாட்’, ‘மக்கள் ஆட்சி’, ‘மறுமலர்ச்சி’, ‘ராஜா போக்கிரி ராஜா’, ‘விஷ்வ துளசி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பழசி ராஜா’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். 1971ம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம் 40 ஆண்டுகளைக் கடந்தும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

மகன் துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், அப்பா மம்மூட்டிக்கான ரசிகர்கள் பட்டாளத்திற்கு கேரளாவில் குறைவில்லை. இப்படிப்பட்ட முன்னணி நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கலந்து கொண்ட பேசிய ஒரு நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும் எனக்கூறியது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?