புதிய தொழிலில் கலக்கும் பிக்பாஸ் ஜனனி! குவியும் வாழ்த்து..!

Published : Aug 06, 2021, 07:37 PM IST
புதிய தொழிலில் கலக்கும் பிக்பாஸ் ஜனனி! குவியும் வாழ்த்து..!

சுருக்கம்

 நடிப்பை தொடர்ந்து பல நடிகைகள் அடுத்தடுத்து புதிய பிஸினஸில் கலக்கி வரும் நிலையில், ஜனனியின் இந்த முயற்சியையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில், 'அவன் இவன்' , 'தெகிடி' போன்ற சில வெற்றிப்படங்களில் நடித்தும், இதுவரை நடிகை ஜனனியால் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற கனவோடு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

ஆரம்பம் முதலே, தன்னுடைய அருமையான விளையாட்டால்... வெற்றி பெரும் பெறுபவர்களின் லிஸ்டில் இவருடைய பெயரும் இடம்பெற்றாலும், சில விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல்... வெற்றியை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொண்டு விளையாடியதால்... நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறினார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் பிசியாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் இந்த வருடம் மட்டும் இவருடைய கை வசம், தொல்லைகாட்சி, வேழம், கசட தபற, பகீரா உள்பட 6 படங்கள் உள்ளது. இந்நிலையில் கொரோனா லாக் டவுன் சமயத்தை பயன் படுத்திகொண்டு, நடிகை ஜனனி அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார்.

The Hazel Avenue எனும் இணையத்தளத்தில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, ரகரகமான மாடர்ன் உடைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவரே விளம்பர படங்களுக்கு மாடல் ஆகவும் உள்ளார். இவருக்கு பல பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும் கூறப்படுகிது. நடிப்பை தொடர்ந்து பல நடிகைகள் அடுத்தடுத்து புதிய பிஸினஸில் கலக்கி வரும் நிலையில், ஜனனியின் இந்த முயற்சியையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்
ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்