இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... அஜித்தை அடுத்து ரஜினி ரசிகர்களின் அட்ராசிட்டி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 06, 2021, 05:42 PM IST
இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... அஜித்தை அடுத்து ரஜினி ரசிகர்களின் அட்ராசிட்டி...!

சுருக்கம்

அப்பாடா இவங்க பஞ்சாயத்து ஓவர் என நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அண்ணாத்த பட அப்டேட் கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளனர். 

போனி கபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஆகியோர் இரண்டாவது முறையாக ஒன்றிணையும் வலிமை படத்தின் அப்டேட் இரண்டு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தல ரசிகர்களுக்கு கிடைத்தது. கொடாக் கண்டனாக போனிகபூரு, விடாக் கண்டனாக அஜித் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் செய்த அட்ராசிட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல. படத்திற்கு பூஜை போட்டதோடு சரி அப்டேட் தர வேண்டும் என்பதையே மறந்து போனார் போனிகபூர், இதனால் கடுப்பான ரசிகர்கள் ‘போனிகபூரை காணவில்லை’ என ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினர். 

போதாக்குறைக்கு வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் அடிப்பது, ட்விட்டரில் விதவிதமாக ஹேஷ்டேக் போட்டு  ட்ரெண்ட் செய்வது, தல மேனேஜரான சுரேஷ் சந்திராவை மாத்த சொல்வது என அலப்பறைகள் ஏராளம். உச்சகட்டமாக பாரத பிரதமர் மோடி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வானதி சீனிவாசன் என கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு கடுப்பேற்றினர். இதனால் கோபமடைந்த தல அஜித், ரசிகர்களை வெளுத்து வாங்கும் வகையில் அறிக்கை எல்லாம் வெளியிட்டு கண்டித்தார். 

முதலில் அஜித் பேச்சை கேட்பது போல் இருந்தாலும்,  தல ரசிகர்கள் பின்னாளில் தங்களுடைய சேட்டைகளை தொடர்ந்து தான் வந்தனர். எனவே தான் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி வலிமை  படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டரையும், சமீபத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிட்டு தல ரசிகர்களை  குஷியாக்கியது. அப்பாடா இவங்க பஞ்சாயத்து ஓவர் என நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அண்ணாத்த பட அப்டேட் கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அட்ராசிட்டியை ஆரம்பித்துள்ளனர். 


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ்  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. தற்போது இந்த படத்தின் டப்பிங்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,  ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்கிற தகவல் கசிந்துள்ளது. ஆனால் இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. எனவே அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேள்வி கேட்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!