
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆக்ஷன் காட்சியில் கலக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'நானும் ரவுடி தான்' தான் படத்தின் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த, சூர்யா அடுத்ததாக 'சிந்துபாத்' படத்தில் பல காட்சிகளில் தன்னுடைய தந்தையுடன் தோன்றினார். இப்படி குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அடுத்ததாக ஹீரோவுக்காக நடிக்க பயிற்சி எடுத்து வருகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இவரது அதிரடி ஆக்ஷன் வீடியோ.
தந்தை 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்வார் என்கிற பழமொழிக்கு ஏற்றபோல... அப்படி இருக்கிறந்து தற்போது வெளியாகியுள்ள வீடியோ. அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு 'மானாட மயிலாட' கோகுலுடன் ஃபைட்டிங் சீனில் கெத்து காட்டியுள்ளார் சூர்யா. இந்த வயதில் இப்படி ஒரு திறமையா என பலரையும் இந்த வீடியோ வியர்ந்து பார்க்க வைத்துள்ளது.
ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக ஹீரோவாக களம் இறங்கிவாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு என அடுத்தது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மாஸ்டர் செஃப் என்கிற நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.