3 மாதங்களுக்கு பின் புதுவையில் இன்று முதல் திறக்கப்பட்ட திரையரங்குகள்..!

By manimegalai aFirst Published Aug 6, 2021, 2:21 PM IST
Highlights

புதுவையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக மே மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 3 மதத்திற்கு பின் 50 சதவீத இருக்கைகளுடன், செயல்பட துவங்கியுள்ளது.
 

புதுவையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக மே மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 3 மதத்திற்கு பின் 50 சதவீத இருக்கைகளுடன், செயல்பட துவங்கியுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில், அனைத்து மதுபானக் கூடங்கள், மால்கள், கோவிகள் மூடப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வரவே மெல்ல மெல்ல சில தளர்வுகளை அறிவித்து வந்தது புதுவை அரசு.

அந்தவகையில் சமீபத்தில் மது கூடங்கள், கடைகள் போன்றவை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தனியார் அலுவலங்கங்களும் கட்டுப்பாடுகளுடன் இயங்க துவங்கியது, மேலும் கடற்கரை சாலை, பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவை திறக்கவும், கோயில்களில் உரிய சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்யவும் அரசு அனுமதி கொடுத்தது.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், திரையரங்குகள் இயங்க புதுவையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பட்டு வந்ததால், பெரும்பாலான திரையரங்குகள் இன்றுமுதல் செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படாததால், ஏற்கனவே வெளியான ஹிட்டான படங்கள் மற்றும் இங்கிலீஷ் டப்பிங் படங்கள் திரையிடப்பட்டது. எனினும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை திரையரங்குகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 9 மணி வரை மட்டுமே படங்கள் திரையிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும், உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

click me!