சூர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் 9 வித்தியாசமான கதைகளில் உருவான 'நவராசா' அந்தோலஜி திரைப்படம் வெளியானது!

Published : Aug 06, 2021, 01:33 PM IST
சூர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் 9 வித்தியாசமான கதைகளில் உருவான 'நவராசா' அந்தோலஜி திரைப்படம் வெளியானது!

சுருக்கம்

நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் 9 வித்தியாசமான கதைகளில், 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 'நவரசா' அந்தோலஜி திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.  

நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் 9 வித்தியாசமான கதைகளில், 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 'நவரசா' அந்தோலஜி திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

நவரசா இணையதள தொடரை, இயக்குநர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் Qube Cinemas நிறுவனங்களுடன் இணைந்து, 9 இயக்குநர்கள், பல்வேறு நடிகர் நடிகைகளை வைத்து... மொத்தம் 9 பாகங்களாக இயக்கியுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ... மொத்தம் 9 இசையமைப்பாளர்கள் இந்த அந்தோலஜி தொடருக்கு இசையமைத்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் இன்று வெளியாகி உள்ளது.

இதில் நடித்துள்ள ஒவ்வொரு பிரபலங்களும் சிரிப்பு, அழுகை, கோபம், பயம், வெட்கம், கருணை, அருவருப்பு உள்ளிட்ட 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள, தொடரில் நடித்துள்ளது.

படத்தின் விவரம்:

1. தலைப்பு  - எதிரி (கருணை)
   இயக்குநர் - பெஜோய் நம்பியார்
   நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி 

2. தலைப்பு  -  சம்மர் ஆஃப்  92 ( நகைச்சுவை )
   இயக்குநர் - ப்ரியதர்ஷன்
   நடிகர்கள் - யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு 

3. தலைப்பு  -புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)
  இயக்குநர் - கார்த்திக் நரேன்
   நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  - பாயாசம் ( அருவருப்பு )
   இயக்குநர் - வசந்த் S  சாய்
   நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  - அமைதி ( அமைதி )
   இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
   நடிகர்கள் - சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  - ரௌத்திரம் ( கோபம் )
   இயக்குநர் - அர்விந்த் சுவாமி
   நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  - இண்மை  ( பயம் )
   இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத் 
   நடிகர்கள் - சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  - துணிந்த பின் (தைரியம்)
   இயக்குநர் - சர்ஜூன் 
   நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  - கிடார் கம்பியின் மேலே நின்று  ( காதல் )
   இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்
   நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

இந்த அந்தோலஜி வெப் தொடர் கொரோனா தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் Justickets  நிறுவனத்தின்  கீழ் AP International மற்றும்  Wide Angle Creations எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்களால்  இணைந்து  தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையின் முன்னணி திரைத்துறை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த அந்தோலஜி வெப் தொடரின் ட்ரைலர் மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த தொடருக்கும் அதே அளவிலான எதிர்பாப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!